தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியா
ஆலயமே எங்கள் கலையகமே
எண் எழுத்தோடு விஞ்ஞானம் சூழல்
இரு மொழி கவின்கலை சமயம்
மண்ணகத்தே நாம் மறுவறப் பயின்றே
மாண்புற வாழ்வினிலுயர்வோம்
(தாழங்குடா)
மதம்பல இனம்பல மருவிநின்றாலும்
மாணவரனைவரும் ஒன்றே
நிதந்தாய் தந்தை குரு பெரியோர்கள்
நீழ்கழல் பணிந்திடுவோம்
(தாழங்குடா)
தொன்மையின் நினைவை எண்ணியுள்ளாய்ந்து
தூய நல்வாழ்வினில் வாழ்ந்தே
அன்னையெம் பூமி இன்னமும் வளர
அயராதுழைத்தே உயர்வோம்!
(தாழங்குடா)





