எமது பாடசாலையானது மட்/தாழங்குடா அ.த.க பாடசாலை எனும் பெயருடன் சேனைத்தெரு மாரிப்போடி, வல்லிபுரம் ஆகியோரின் முயற்சியால் 06 மாணவவர்களுடன் 02 ஆசிரியர்களைக் கொண்டு 16.06.1941 இல் ஆரம்பிக்கபட்டது. முதல் அதிபராக திரு. மு. வேல்நாயகம் கடமையாற்றினார். பிற்பட்ட காலத்தில் மட்/தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயம் என பெயர் மாற்றம் பெற்றது. கலவன் பாடசாலையான இப்பாடசாலையில் இந்து மாணவர்கள் பெரும்பான்மையாக கல்வி கற்பதுடன் கிறிஸ்தவம், றோமன் கத்தோலிக்க மாணவர்களும் கல்வி கற்கின்றனர் 2015 ஆம் ஆண்டு வரை க.பொ.த சா/த வகுப்புடன் காணப்பட்ட இப்பாடசாலை 2016 தொடக்கம் க.பொ.த உ/த அனுமதியுடன் கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. இதனால் இப்பாடசாலை வகை 1C தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டது. க.பொ.த உ/த இற்கு 2018 இல் முதன்முறையாக 11 மாணவர்கள் தோற்றினர். இவர்களில் ஒரு மாணவி பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். 2019 இல் க.பொ.த உ/த வணிகத்துறைக்கு 05 மாணவர்கள்; சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இவர்கள் 2022 இல் முதன்முறையாக க.பொ.த உ/த இற்குத் தோற்றினர். இவர்களில் 03 மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார்கள். பாடசாலை வரலாற்றில் 2022(2023) கல்வி ஆண்டில் க.பொ.த சா/த இற்குத் தோற்றிய மாணவி ஒருவர் 9A சித்திகளைப்பெற்று சாதனையைப் பதிவு செய்தார். அத்துடன் 2023ம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 6 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளதுடன் 70 புள்ளிகளுக்கு மேல் 92% மாணவர் சித்தி பெற்றனர்.

பாடசாலை அமைந்துள்ள பிரதேசம் கிரமாப்புறமாக இருப்பதால் இங்குள்ள பெற்றோர்களின் வருமானம் மிகக் குறைவான மட்டத்தில் காணப்படுகின்றது. இருந்த போதிலும்; விளையாட்டு, சித்திரம், சங்கீதம், சமூகவிஞ்ஞானம் போன்ற இணைப்பாடச் செயற்பாடுகளிலும் தேசியம்வரை பங்குபற்றி குறிப்பிடத்தக்க சாதனைகளை பதிவு செய்து வருகின்றனர். இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து தற்போதுவரை 15 அதிபர்கள் கடமையாற்றியுள்ளனர்.
பௌதிக வள நிலையைப் பொறுத்த வகையில் 17 வகுப்பறைகளும் 08 விசேட அலகுகளும் மற்றும் மைதானம், ஒன்றுகூடல் மண்டபம் என்பன தேவையாக உள்ள போதிலும் 14 வகுப்பறைகளையும் 05 விசேட அலகுகளையும், பிரதான மண்டபத்தினுள் பிரிக்கப்படாமல் 06 வகுப்பறைகளையும் கொண்டு இயங்கி வருகின்றது. இப்பாடசாலைக்கு உதவிகள் சிறிதளவில் கிடைக்கப் பெறுகின்ற போதிலும் கிடைக்கின்ற சமுக, மற்றும் கல்வித்திணைக்களம், ஏனைய அரச சார்பற்ற அமைப்புக்களின் மூலம் கிடைக்கும் உதவியினைக் கொண்டு தரமான கல்வியினை வழங்கி வருகின்றது.
பாடசாலை அமைந்துள்ள பிரதேசம் கிரமாப்புறமாக இருப்பதால் இங்குள்ள பெற்றோர்களின் வருமானம் மிகக் குறைவான மட்டத்தில் காணப்படுகின்றது. இருந்தபோதிலும் இப்பாடசாலை மாணவர்கள் இணைப்பாட விதானச் செயற்பாடுகளிலும் தேசிய மட்டம் வரை கலந்து கொண்டு சாதனை படைத்து வருகின்றனர். பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து தற்போதுவரை 15 ஆவது அதிபருடன் செயற்பட்டு வரும் பாடசாலையாக காணப்படுகின்றது.





