மட்டக்களப்பு கல்வி வலயத்தில் வளர்ந்து வரும் பாடசாலைகளில் ஒன்றாக எமது பாடசாலை திகழ்கின்றது. இதற்கு பாடசாலையின் கல்விசார், கல்வி சாரா பணியாளர்களின் அர்ப்பணிப்பும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு, பழைய மாணவர்கள், பாடசாலை மீது அவிருத்தி சார்பான நலன் விரும்பிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாக பெற்றுக் கொள்ளப்படுகின்றது. எமது மாணவர் கல்விசார் நடவடிக்கைகளிலும் இணைப்படவிதானச் செயற்பாடுகளிலும் விருத்தி பெற்று வருகின்றனர். 21ம் நூற்றாண்டின் கல்விப் போக்கானது தொழிநுட்பத்தை மையப்படுத்தியதாக உருவாகி வருகின்றது. எனவே எமது மாணவர்கள் எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடியதும் கல்வியின் தேசிய இலக்குகளை அடையக் கூடியதுமான நற்பிரசையாக உருவாகி வெளியேறுகிறார்கள்.
சமூக மேம்பாட்டிற்காக எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடியதும் செயல்திறன் மிக்கதுமான உயர்கல்வி நோக்கிய மாணவர் சமுதாய உருவாக்கம்
அரசு அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்தும் சமூகத்திடமிருந்தும் கிடைக்கும் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடியதும் உடல், உள, சமூக ஆரோக்கியமானதும் ஆத்மிக பலமுள்ளதுமான சிறந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்குதல்.